உணவுப் பொருட்களும் மருத்துவப் பயன்களும்

ISBN : 9789387681453

BUY NOW

மனிதனின் உடலுக்கு சக்தியையும், வலிமையையும் கொடுக்க, காற்றிள்ள பிராண வாயுவிற்கு அடுத்தவையாக நீரும், உணவும் தேவைப்படுகின்றன. மக்கள் பல்வேறு வகையான உணவுப்பொருட்களை பழக்கத்தினாலும், வழக்கத்தினாலும், உணவாக உட்கொள்கிறார்கள். மக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தாவரப்பொருட்கள் ஒவ்வொன்றிலும் பல உணவுச் சத்துக்கள் அடங்கியுள்ளன. அனைத்துவகை சத்துக்களும் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவை என்றாலும், சில சத்துக்கள் குறிப்பிட்ட சில நோய்களின் தாக்கத்தை குறைக்கவும், போக்கவும் கூடியவனவாக இருக்கின்றன. ஆகவே, உணவுப் பொருள்களில் உள்ள சத்துக்களின் மருத்துவ குணங்களை அறிந்து, தேவைக்கேற்றவாறு உணவுப்பொருட்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பெரும் பயனளிக்கும்.