ISBN: 9789387681491
கூர்மையான கற்பனை அபரிமித எழுச்சிக்கு எவ்வாறு இட்டுச்செல்கிறது? நவீன கவிதையின் சாத்தியங்களும் வீச்சும் கொண்ட அண்மைய கவிதைகள், முள்வெளி நாவலின் கவிதைகளில் மனித வாழ்க்கையின் என்றுமே விளங்காப் புதிர்கள், சமகால வாழ்க்கையின் சவால்கள் இரண்டுமே சமமாய் விடைகளாக, ஆழ்தரிசனங்களாக விரிகின்றன. பெண்மை பற்றிய ஆணின் முன்முடிவுகளின், ஒரே வாக்குமூலமாய் ஏகப்பட்ட ஆண்களின் உளக்கிடக்கைகளின் வாக்குமூலமாகிறது குதிரை ஏறும் காதல். மனிதனின் குறை நிறைகள் அகன்ற அசல் ஆண்மையோ பெண்மையோ சாத்தியமா? காதல் பற்றிய நட்பு பற்றிய பெண்ணின் புரிதல் இயல்பான ஆண்மைக்கே எதிரானது. ஆணுலகமோ பெண் பற்றிய மிகத் தவறான புரிதலில் இருண்டிருக்கிறது. இருவருக்கும் ஒரேபோல பொது வெளியோ, பொது ரசனையோ, புரிதலோ, எதிர்பார்ப்பில்லாத எந்த ஒன்றுமோ இல்லை. ‘பகல் வேஷம்’ நீள்கவிதை பகல்-இரவு உரையாடலை செவிமடுக்கும் அளவு இளகியும் மனம் நொந்தும் இருக்கும் ஒருவனின் நினைவலைகள். மனச்சித்திரங்கள் நிஜம், பாதிநிஜம், பகுதிநிஜம் என மையச்சரட்டில் கூர்மையாகி, மாயையின்றிக் கலையில்லை என அறுதியிடும் கவிதைகள் இவை.