ISBN:9789387681484
உள்ளடக்கம், காலகட்டம் ஆகிய இருவிதங்களில் இருபகுதிகளாகப் பிரித்தறியக் கூடிய இக்கவிதைகளில் முதற்பாதி சத்யானந்தனின் அண்மைய ஆக்கங்கள். ‘கைப்பைக்குள் கமண்டலம்’ உள்ளிட்ட அந்த தேவதைக் கவிதைகள் சகஜீவிகளிடம் காண முடியாத பரிவைத் தேடும் ஓர் ஆன்மாவின் ஓயாத அரற்றலாய் நெருடுபவை. காட்சிப்படுத்தலில் படிமசாத்தியங்களை மிகச் சீரிய முறையில் கடைந்தெடுத்துத் திரள்பவை. தொகுதியின் எல்லாக் கவிதைகளுமே தொலைந்த மானுடத்தை தேடுவதையே மையச் சரடாகக் கொண்டவை. பிற்பகுதிக் கவிதைகள் ஆரம்பக்காலத்தவை – சொற்சிக்கனத்திலும் கூர்மையிலும் வீச்சுக் கொண்டவை. எழுத்து ஆடை/ தேடலே தோல் எனும் நான்கு சொற்களால் ஆன கவிதை ஓர் நல்லுதாரணம்.