நோய்களும் மாற்றுமுறை மருத்துவமும்

₹ 200

BUY NOW

ISBN : 9789390677313

மருத்துவர்‌ ரேவதி பெருமாள்சாமி அவர்கள்‌, ஹோமியோபதி, அக்குபிரஷர்‌, யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவங்கள்‌ பற்றியும்‌, இயற்கை உணவு முறைகள்‌ பற்றியும்‌ பல புத்தகங்கள்‌ எழுதி உள்ளார்‌. இவர்‌ ஒரு இயற்கை ஆர்வலர்‌. இவர்‌ இணையதளம்‌ மற்றும்‌ YouTube வாயிலாக மாற்றுமுறை மருத்துவத்தைப்‌ பற்றியும்‌ மூலிகைகளைப்‌ பற்றியும்‌ பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார்‌. இவரது கட்டுரைகள்‌ விகடன்‌, மங்கையர்‌ மலர்‌, ஆலயம்‌ சினேகீத்‌, உணவு உலகம்‌ ஆகிய மாத இதழ்களில்‌ வெளிவந்துள்ளது. சிறந்த மேடை பேச்சாளரான இவர்‌ கலைஞர்‌, பொதிகை தொலைக்காட்சி மற்றும்‌ வானொலி நீகழ்ச்சிகளிலும்‌ பங்கு பெற்றுள்ளார்‌. தமிழ்‌ மீது அளவற்ற பற்றுடைய இவர்‌, தற்போது தமிழிலே முனைவர்‌ (Ph.D.) பட்டம்‌ பெற உள்ளார்‌. இவர்‌ M.Sc (Home Science) மற்றும்‌ M.A (Tamil) இல்‌ முதுகலைப்பட்டமும்‌, ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி, அக்குபஞ்சர்‌, வர்மக்‌ கலை ஆகியவற்றில்‌ பட்டயப்‌ படிப்பும்‌, மாற்றுமுறை மருத்துவத்தில்‌ M.D. பட்டமும்‌பெற்று பதிவுபெற்ற மருத்தவர்‌ ஆவார்‌. இவரது எழுத்துத்‌ திறமையைப்‌ பாராட்டி 2015 ஆம்‌ ஆண்டூ நெய்வேலி புத்தகக்‌ கண்காட்சி இவருக்கு சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கி கவுரவித்தது.