தொல்காப்பியம் – பொருளதிகாரம்

₹ 500

BUY NOW

பேராசிரியர் ப. மருதநாயகம் ஆங்கிலம், தமிழ், அமெரிக்கஇலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப்பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்க நாட்டு ஹவாயிபல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டங்களும் தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காக ஆங்கிலத்தில் முனைவர் பட்டமும், தெ.பொ.மீ பற்றிய ஆய்வேட்டிற்காகத்‌ தமிழில்‌ முனைவர்‌ பட்டமும்‌, “தமிழ்ச்செவ்விலக்கியங்கள்‌: ஒப்பியல்‌ பார்வை” என்னும் ஆங்கிலக்கட்டுரைத்‌ தொகுதிக்காகப்‌ புதுவை நடுவண்‌ பல்கலைக்கழகத்தின் முதல் டி.லிட்‌ பட்டமும் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகளிலும்‌ பல்கலைக்கழகங்களிலும்‌ ஆங்கிலப்‌ போராசிரியராகக்‌ கடமைஆற்றியுள்ளார்‌.