சிலப்பதிகாரம் (Hardbound – Colour)

SilapathigaramHardbound

ISBN : 978-81934543-0-5

₹ 1100

BUY NOW

சிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டம் ஒன்றை எடுத்தியம்பும் காப்பியமாகும். கண்ணகி தன் வாழ்வை இழந்து தவித்தாள். மாதவி தனக்குரியதை அடையப் போராடினாள். கண்ணகியின் கதையையே இளங்கோவடிகளார் எடுத்தியமி ஓரறத்தை நிறுவியுள்ளார். மாதவி தன் சமூக நீதியைப் பெற்று நிறுவப் போராடினாள். அதில் அவள் வென்றாளா? தோற்றாளா? தன் அறப் போராட்டத்தில் அவள் தெய்வத்தையோ ஊழையோ ஊரையோ மன்னனையோ உதவிக் கழைக்கவில்லை. ஏனெனில் அவையெல்லாமே தன் எதிரிகளாக உள்ளன என்பதை நன்குணர்ந்த நல்லறிவாட்டியே அவளாதலின் என்க. தன்னையே நம்பித் தன் தாய், தன் சாதி, தன் காதலன், அரசு, போன்ற அனைத்தையும் எதிர்த்துத் தன்னந்தனியளாய்ப் போராடினாள்.

இந் நூலைப் படித்தோர் சிலப்பதிகாரத்தைக் கற்றோராக முடியாது. சிலப்பதிகாரத்தைக் கற்க இது உதவ முடியும் அவ்வளவே. சிலப்பதிகாரத்தை அரும்பத வுரையாசிரியர், அடியார்க்கு நல்லார் ஆகியோரின் உரைகளோடும் கற்று இக்கால அறிஞர் பெருமக்களின் ஆய்வுரைகளையும் பெரும்பாலும் அறிந்தோரே சிலப்பதிகாரத்தைக் கற்றோராக முடியும் என்பது எம் கருத்து.