ISBN : 9789389080599
அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு இலக்கு உண்டு. அதை நோக்கியப் பயணத்தில்தான் நாம் தினசரி ஈடுபட்டிருக்கிறோம். இதில் மாணவப்பருவம் மிக முக்கியமான காலகட்டம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதற்கு ஏற்றார் போல் சிறு வயதிலேயே சில பயிற்சிகளைப் பழகிக்கொண்டு, வெற்றியை நோக்கியப் பயணத்தை துவக்கிக்கொண்டால் பாதையில் தடைகள் இல்லாமல் முன்னேறலாம். அதுமட்டுமின்றி கவனச்சிதறல்கள் மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் போது அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஒரு மூத்த சகோதரி தான் படித்து கற்றுக்கொண்ட விஷயங்களை, அனுபவத்தில் அறிந்த விஷயங்களை, அன்றாடம் மேற்கொண்டு வெற்றிகண்ட பயிற்சி முறைகளை, தன் தம்பி தங்கைகளுக்கு சொல்வது போன்ற விதத்தில் இந்நூலை, மாணவர்களாகிய உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இந்த புத்தகம் உங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்தில் நிச்சயம் துணையாக இருக்கும் என முழுமையாக நம்புகிறேன்.