மணிமேகலை

manimegalai

ISBN (HB) : 9789387681149

ISBN (PB) : 9789387681118

Book Price (Hardbound) ₹ 650.00

Book Price(Paperback) ₹ 500.00

BUY NOW

“வளங்கெழு கூலவாணிகன் சாத்தனா” ரால் இயற்றப்பட்;ட “மாவண் தமிழ்த்திறம்” வாய்ந்த மணிமேகலை என்னும் பெயர்பெற்ற காப்பியம் தமிழ்றத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் வலியுறுத்தவும்இ தமிழ்கூறும் நல்லுலகைச் சீர்திருத்தவும்இ தமிழ் நாட்டில் நிகழ்ந்த வரலாறொன்றினை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இயற்றப்பட்ட முதற் காப்பியமாகும். தமிழ் மக்களிடையே புரையோடிக் கிடந்த சாதி வேறுபாடுஇ குடிஇ சூதுஇ பரத்தைமை போன்ற தீங்குகளை வெளிப்படையாக எதிர்த்து வன்மையாகத் தாக்கிப் புரட்சி செய்த முதற் காப்பியமும் இதுவே. ஆவினம் போற்றல்இ அரும் பசி களைந்து ஆரூயிர்ப் பேணல்இ ஒழுக்க வாழ்வே விழுப்பந்தரும் வாழ்வாகக் கொள்ளல் போன்ற நல்லறங்களை இத்துணைத் தெளிவாகவும் உறுதியாகவும் விளக்கி வலியுறுத்தும் நூலும் வேறு காண்பதரிதாகும். பிற சமயங்களை ஒதுக்கிப் புத்த நெறியே விழுமியது என்று கூறும் தலை சிறந்த நூலும் இதுவே.