நந்தனும் நாய்க்குட்டியும்

nanthan

ISBN 9789387681095

₹ 200.00

BUY NOW

நந்தன் என்ற சிறுவன் விசித்திர கொடூரன் என்ற கொடிய மாயக்காரனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் நண்பனாகிய பைரவன் என்ற நாய்க்குட்டியை மீட்பதற்காக மேற்கொள்ளும் சாகசப் பயணத்தை விவரிப்பதே ` நந்தனும் நாய்க்குட்டியும் ` . நற்செயல்களின் மூலமும் புவியில் வாழும் சக உயிர்களிடம் அன்பு காட்டுவதன் மூலமும் சிறுவனான நந்தன் கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்று கொடிய மாயக்காரனைக் கொன்று தன் நண்பன் பைரவனை ஒரு மாய லோகத்திலிருந்து எப்படி மீட்டு வருகிறான் என்பதே இதன் கதை. விசித்திரமான உலகம், வினோதமான பறவைகள், விலங்குகள் , பூதன், வான் மனிதன், பெருங்கழுகன், பெருநாகன் போன்ற வர்களை சிறுவர்கள் இதில் சந்திக்கலாம். நந்தன் பைரவன் நட்பும் பிற உயிர்களிடம் நந்தன் காட்டும் அன்பும் அவை நந்தனுக்குச் செய்யும் உதவிகளும் சிறுவர் சிறுமியரை வெகுவாகக் கவரும்.